தமிழக சட்டசபையின் நேற்றைய கூட்டத்தில் தங்க மோதிரம் திட்டம், மகளிருக்கு ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் அமலானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளான நேற்று முதல் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் அமலுக்கு வந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டமானது தமிழக அரசின் திட்டமாகும். இது மாநில அரசு மருத்துவமனைகளில் புதிதாகப் பிரசவிக்கும் ஒவ்வொரு பிறந்த குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரத்தை வழங்குகிறது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.