சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 16 முதல் தொடங்கவுள்ள நிலையில், பாடவாரியான தேர்வு அட்டவணை மற்றும் மாதிரி வினாத்தாள்கள் குறித்த செய்தித் தொகுப்பு.
புதுதில்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2027-ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு அட்டவணையைத் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அறிவிப்பின்படி, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் 2027 பிப்ரவரி 16-ஆம் தேதி ஒரே நேரத்தில் தொடங்குகின்றன. 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 9-ஆம் தேதியுடனும், 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 9-ஆம் தேதியுடனும் நிறைவடைகின்றன.
10-ஆம் வகுப்பு முக்கியத் பாடங்களுக்கான தேர்வு அட்டவணை:
- பிப்ரவரி 17: கணிதம் (Standard / Basic)
- பிப்ரவரி 22: அறிவியல்
- பிப்ரவரி 26: ஆங்கிலம் (Communicative / Language & Literature)
- மார்ச் 3: ஹிந்தி (Course-A / B)
- மார்ச் 8: சமூக அறிவியல்
12-ஆம் வகுப்பு முக்கியப் பாடங்களுக்கான தேர்வு அட்டவணை:
- பிப்ரவரி 16: இயற்பியல் (Physics)
- பிப்ரவரி 23: கணக்கியல் (Accountancy)
- பிப்ரவரி 25: புவியியல் (Geography)
- பிப்ரவரி 27: வேதியியல் (Chemistry)
- மார்ச் 2: உளவியல் (Psychology)
- மார்ச் 5: ஆங்கிலம் (Core / Elective)
- மார்ச் 9: கணிதம் / பயன்பாட்டு கணிதம்
- மார்ச் 13: ஹிந்தி (Core / Elective)
- மார்ச் 16: பொருளாதாரம் (Economics)
- மார்ச் 19: அரசியல் அறிவியல் (Political Science)
- மார்ச் 25: உயிரியல் (Biology)
- மார்ச் 27: வரலாறு (History)
- மார்ச் 30: சமூகவியல் (Sociology)
- மார்ச் 31: கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம்
- ஏப்ரல் 1: வணிகவியல் ஆய்வுகள் (Business Studies)
மாதிரி வினாத்தாள்கள் (Sample Papers) வெளியீடு:
தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் வசதிக்காக 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான அனைத்து பாடவாரியான மாதிரி வினாத்தாள்களையும் (Sample Question Papers) சிபிஎஸ்இ தனது கல்வி இணையதளத்தில் (cbseacademic.nic.in) வெளியிட்டுள்ளது.
தேர்வு அட்டவணையைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?
- cbse.gov.inஅல்லதுcbseacademic.nic.inஇணையதளத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள “CBSE 10th & 12th Date Sheet 2027” என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
- திரையில் தோன்றும் தேர்வு கால அட்டவணை PDF கோப்பை பதிவிறக்கம் (Download) செய்து சேமித்துக் கொள்ளலாம்.