லோக்சபாவில் திரிணமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசாங்கம் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இருந்து கிட்டத்தட்ட 12.68 லட்சம் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் கணக்குகளை ஜோஹோ அடிப்படையிலான தளத்திற்கு மாற்றியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 7.45 லட்சம் கணக்குகள் மத்திய அரசு ஊழியர்களுடையவை என்று டிஎம்சி எம்பி அபிஷேக் பானர்ஜியின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) தெரிவித்துள்ளது.
“ஜோஹோ தளத்திற்கு மாற்றப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை சுமார் 12.68 லட்சம் ஆகும், இதில் 7.45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் அடங்குவர்” என்று மத்திய மின் மற்றும் மின்னணு தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா பதிலில் தெரிவித்தார்.
சுமார் 50.14 மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். டிசம்பர் 10 ஆம் தேதி அளித்த பதிலில், மின்னஞ்சல் கணக்குகள் மாற்றம் செயல்பாடு, தேசிய தகவல் மையம்( என்ஐசி) வழியாகவே மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார்.